search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ்"

    கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடைபெற்ற தாக்குதலுக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம் என தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.
    மும்பை:

    கொல்கத்தா நகரில் நேற்று மாலை நடைபெற்ற பாஜக பேரணியில் அக்கட்சி தலைவர் அமித் ஷா பங்கேற்றார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தை கடந்து சுமார் 7 மணியளவில் கல்லூரி சாலைக்குள் பேரணி நுழைந்தபோது அமித் ஷா வந்த பிரசார வாகனத்தின் மீது சில கம்புகள் வீசப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    பேரணியில் வந்தவர்களுக்கும் வேறொரு தரப்பினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. சாலையோரத்தில் இருந்த கட் அவுட்டுகள் அடித்து நாசப்படுத்தப்பட்டன. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றது. பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

    இந்நிலையில், கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் நடந்த தாக்குதலுக்கு மம்தாவின் தோல்வி பயமே காரணம் என மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டினார்.



    இதுதொடர்பாக அவர் கூறுகையில், மம்தா பானர்ஜிக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித்ஷா பேரணியில் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

    மேர்கு வங்காளத்தில் ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து வருகிறார். தன்னை எதிர்த்து யாரும் தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என அவர் செயல்பட்டு வருகிறார்.

    எனவே, பாராளுமன்ற தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
    லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா நியமனம் தொடர்பான கோரிக்கையை மகாராஷ்டிரா மாநில அரசு ஏற்றதால் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதப் போராட்டதை இன்று கைவிட்டார். #AnnaHazare #DevendraFadnavis #AnnaHazarefast
    மும்பை:

    தேசிய அளவில் லோக்பாலையும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவையும் அமைக்க வேண்டும், விவசாயிகள் பிரச்சனைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தி வருகிறார்.
     
    இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தன்னுடைய சொந்த ஊரான மராட்டிய மாநிலம் ரலேகன் சித்தியில் காந்தி நினைவு நாளான ஜனவரி 30-ந் தேதி அன்னா ஹசாரே காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கினார். அன்னா ஹசாரேவை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது உடல் எடை நான்கரை கிலோ குறைந்து விட்டதாக குறிப்பிட்டிருந்தனர். 

    உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர் உண்ணாவிரதத்தை அன்னா ஹசாரே முடித்துக்கொள்ள வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.



    இதற்கிடையே, 7-வது நாளாக இன்றும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரேவை மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் இன்று சந்தித்தார். அப்போது, வரும் சட்டசபை தொடரில் லோக்பாலுக்கான புதிய மசோதா அறிமுகப்படுத்தப்படும் என முதல் மந்திரி பட்னாவிஸ் வாக்குறுதி அளித்தார்.

    அவருடன் மத்திய வேளாண்மைத்துறை மந்திரி ராதா மோகன் சிங், பாதுகாப்புத்துறை இணை மந்திரி சுபாஷ் பாம்ரே ஆகியோரும் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடுமாறு அன்னா ஹசாரேவிடம் வலியுறுத்தினர். 

    இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா அரசு தரப்பில் பட்னாவிஸ் அளித்த வாக்குறுதியை ஏற்று அன்னா ஹசாரே தனது உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார். #DevendraFadnavis #AnnaHazare #AnnaHazarefast

    பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சியினர் கடுமையாக விமர்சித்துள்ளனர். #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    மும்பை:

    நாட்டில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தபட்ட நாளை கருப்பு தினமாக அனுசரித்த பாஜகவினர், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை விமர்சித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தனர். பிரதமர் மோடியும், மகாராஷ்டிரா முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். 

    இந்நிலையில், நெருக்கடி நிலை காலத்தில் இருந்த நிலைமை தற்போதும் நீடித்து வருகிறது. பிரதமர் மோடியும், முதல் மந்திரி பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர் என சிவசேனா கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. 

    இதுதொடர்பாக சிவசேனா கட்சியின் பத்திரிகையான சாமனாவில் உள்ள தலையங்கத்தில் கூறியதாவது:



    பிரதமர் மோடியும், முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிசும் சர்வாதிகாரிகள் போல் செயல்பட்டு வருகின்றனர். 43 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற எமர்ஜென்சி குறித்து அவர்கள் இப்போது பேசுவது கேலிக்கூத்தாக இருக்கிறது. 

    ஜனநாயக நாட்டில் மக்கள் செத்து மடிந்தால் பரவாயில்லை, ராஜாக்கள் வாழ்ந்தால் போதும். நமது ராணுவ வீரர்களும் விவசாயிகளும் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெய் ஜவான், ஜெய் கிசான் ( ராணுவ வீரர்கள் வாழ்க, விவசாயிகள் வாழ்க) என்ற முழக்கமும் செத்துக் கொண்டிருக்கிறது.

    மக்கள் எதிர்ப்பை மீறி ரத்னகிரி பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திறப்பது புற்றுநோய் மருத்துவமனையை திறப்பதற்கு சமமாகும் என தெரிவித்துள்ளது. #Emergency #Saamana #PMModi #DevendraFadnavis
    சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். #CMDevendraFadnavis #Shivsena #UddhavThackeray
    மும்பை:

    சமீபத்தில் நடைபெற்ற மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மற்றும் பந்தாரா - கோண்டியா மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை இன்று தொடங்கியது. இதில் பால்கர் தொகுதியில் பாஜக வென்றது. பந்தாரா - கோண்டியா தொகுதியில் தேசியவாத காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    இதற்கிடையே, மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றதற்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களே காரணம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே குற்றம் சாட்டினார்.

    இந்நிலையில், சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என மகாராஷ்டிரா மாநில முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தேவேந்திர பட்னாவிஸ் கூறுகையில், நாங்கள் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. இன்னும் சிவசேனாவுடன் கூட்டணி தொடர்ந்து கொண்டு வருவதாக நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். சிவசேனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாஜக தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார். #CMDevendraFadnavis #Shivsena #UddhavThackeray
    ×